
சபரிமலை தரிசனத்திற்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம்பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசனம் செய்ய 1.04 லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர் .சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 12-ந்தேதி 1 லட்சத்து 3 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
மண்டல, மகர விளக்கு பூஜை நெருங்குவதையொட்டி சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முதன் முறையாக நாளை (வெள்ளிக்கிழமை) 1 லட்சத்து 4 ஆயிரத்து 200 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர். அதேபோல் வருகிற 12-ந்தேதி 1 லட்சத்து 3 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை 93 ஆயிரம் பக்தர்களும், 10-ந்தேதி 90 ஆயிரம் பக்தர்களும், 11-ந்தேதி 59 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு இதுவரை முன்பதிவு செய்து உள்ளனர்.
உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருவதால் இந்த நாட்களில் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3-ம் கட்டமாக 1335 போலீசார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம்பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
