
‘மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்:
9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று நிவாரண முகாம்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை
ஆணையம் (முகநூல், டுவிட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியைதொடர்ந்து கவனிக்க வேண்டும்.
மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
மாண்டஸ் புயலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அரசு பேருந்துகள் இரவில் இயங்காது: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு.
தமிழகத்தில் நாளை (9.12.2022) பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் மாற்றம் குறித்த விவரம்…
24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
1) சென்னை
2) திருவள்ளூர்
3) செங்கல்பட்டு
4) காஞ்சிபுரம்
5) விழுப்புரம்
6) வேலூர்
7) ராணிப்பேட்டை
8) கள்ளக்குறிச்சி
9) தஞ்சை
10) திருவாரூர்
11) நாகை
12) மயிலாடுதுறை
13) அரியலூர்
14) பெரம்பலூர்
15) புதுக்கோட்டை
16) சேலம்
17) கடலூர்
18) நாமக்கல்
19) திருப்பத்தூர்
20) திருவண்ணாமலை
21) தருமபுரி
22) ராமநாதபுரம்
23) திருச்சி
24) சிவகங்கை
புதுவை மற்றும் காரைக்காலில் தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன.
நாளை (09-12-2022) நடைபெறவிருந்த அண்ணா, அண்ணாமலை, சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
- நாளை (09.12.2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.
6 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் : சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 5 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
சென்னை, தென் மண்டல வானிலை மையம் இன்று 08.12.2022, மாலை 1800 மணி வெளியிட்டுள்ள துறைமுக எச்சரிக்கை


ADVICE FOR HOISTING STORM WARNING SIGNALS:
S.No Name of the Port Advice
1 CHENNAI Replace the present signal with Danger Signal Number VI (SIX) with Section signal Number IV (Four).
சென்னை – சமிக்ஞை எண் 6 – “அபாயம்”. புயல் துறைமுகத்தின் இடப்புறத்தில் கடக்கவுள்ளது.
2 CUDDALORE Replace the present signal with Danger Signal Number V (FIVE) with Section signal Number IV (Four).
கடலூர் – சமிக்ஞை எண் 5 – “அபாயம்”. புயல் துறைமுகத்தின் வலப்புறத்தில் கடக்கவுள்ளது.
3 NAGAPATTINAM Replace the present signal with Danger Signal Number V (FIVE) with Section signal Number IV (Four).
நாகப்பட்டினம் – சமிக்ஞை எண் 5 – “அபாயம்”. புயல் துறைமுகத்தின் வலப்புறத்தில் கடக்கவுள்ளது.
4 ENNORE Replace the present signal with Danger Signal Number VI (SIX).
எண்ணூர் – சமிக்ஞை எண் 6 – “அபாயம்”. புயல் துறைமுகத்தின் இடப்புறத்தில் கடக்கவுள்ளது.
5 KATTUPALLI Replace the present signal with Danger Signal Number VI (SIX).
காட்டுப்பள்ளி – சமிக்ஞை எண் 6 – “அபாயம்”. புயல் துறைமுகத்தின் இடப்புறத்தில் கடக்கவுள்ளது.
6 PUDUCHERRY Replace the present signal with Danger Signal Number V (FIVE).
புதுச்சேரி – சமிக்ஞை எண் 5 – “அபாயம்”. புயல் துறைமுகத்தின் வலப்புறத்தில் கடக்கவுள்ளது.
7 KARAIKAL Replace the present signal with Danger Signal Number V (FIVE).
காரைக்கல் – சமிக்ஞை எண் 5 – “அபாயம்”. புயல் துறைமுகத்தின் வலப்புறத்தில் கடக்கவுள்ளது.
8 PAMBAN Keep Hoist Distant Warning Signal Number II (TWO)
பாம்பன் – துறமுகத்தைவிட்டு வெளியில் கடலுள் செல்லும் கப்பல்கள் ஒரு புயல் கடலில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.