குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை -30 செ.மீ. மழை பதிவு..

images 2022 12 15T072245.122 - 2026
Tamil News large 3194046 - 2026

குன்னூரில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 30 செ.மீ. மழை பதிவானது. வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. குன்னூர், பர்லியார், அருவங்காடு, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக குன்னூரில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன. மண் சரிவு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம் பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அகற்றினர். இதேபோல் எல்லநல்லியில் 3 இடங்கள், இந்திரா நகர் உள்பட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றுடன் நள்ளிரவில் மழை பெய்ததால் பிருந்தாவன் பள்ளி பகுதி, அருவங்காடு பால்கார லைன், இந்திரா நகர், வண்டிச்சோலை உள்ளிட்ட இடங்களில் 10 மரங்கள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் குறுக்கே கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.

screenshot61828 1671018572 - 2026
screenshot61833 1671018621 - 2026

கனமழை காரணமாக குன்னூரில் சில பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன குன்னூர் அரசு ஆஸ்பத்திரி வளாகம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தன. பாரத்நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்ததால், 5 இடங்களில் மண் சரிந்தது. இதனால் சில வீடுகள் சேதமானது.

மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழை காரணமாக சாலை களில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. வெலிங்டன் ஆரோக்கியபுரம், அம்பிகாபுரம், லூர்துபுரம், டி.டி.கே. சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ, கார்கள் உள்பட 7 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் வாகனங்கள் சேதம் அடைந்தன. மழை குறைந்த பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வாகனங்கள் மீட்கப்பட்டன. 24 வீடுகள் இடிந்தன குன்னூர் அடுத்த லூர்துபுரம் பகுதியில் விளைநிலத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் உள்ளிட்ட காய்கறிகள் சேதமடைந்தது. கனமழையால் குன்னூர் தாலுகாவில் ஒரே நாளில் 24 வீடுகள் ஒரு பகுதி இடிந்து விழுந்தன.

கனமழை காரணமாக நேற்று நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. குன்னூரில் 30 செ.மீ. மழை நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 30 செ.மீ. கொட்டி தீர்த்துள்ளது. ஒரே நாளில் 30 செ.மீ. பதிவானது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 22 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு அவலாஞ்சியில் ஒரே நாளில் 90 செ.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. மலை ரெயில் போக்குவரத்து ரத்து கனமழை காரணமாக ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்லும் மலை ரெயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்களும் முறிந்து விழுந்து கிடந்தது. இவற்றை அகற்றும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

1038501 moun - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories