இன்று மார்கழி அமாவாசை மூலம் நாள் அனுமத் ஜெயந்தி நாடெங்கும் கோலாகலம்..

FB IMG 1671785828440 - 2026
images 42 1 - 2026

இன்று மார்கழி மூலம் அமாவாசை அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.அனுமன் ஜெயந்தி விழா நாளன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் இன்று அதிகாலை துவங்கி நடைபெற்றுவருகின்றன.நாள் முழுவதும் பூஜைகள் நடைபெறும்.

மார்கழி மாத அமாவாசை நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அனுமன் ஜெயந்தியாக தென் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோவில் . மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

.அந்த வகையில் இந்தாண்டு இன்று 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.இந்த
அனுமன் ஜெயந்திக்காக ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணியில் 2025 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், தலா 32 கிலோ மிளகு சீரகம் ,125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறும் என்றும் இப்பணி வருகிற 22ஆம் தேதி காலை நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

ராமநாமம் சொல்லுங்கள்

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். அன்று நாள் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும்.

குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.

துளசி மாலை

ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

சொல்லின் செல்வன்

அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories