முதலமைச்சர் பதவிக்கு கூட்டணிக் கட்சிகள் போட்டி போடுவதா?: தமிழக பாஜக தலைவர் கண்டனம்

Published:

tamilisai-soundararajan ராமநாதபுரம்: முதலமைச்சர் பதவிக்காக கூட்டணிக் கட்சிகள் போட்டி போடுவதா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பா.ஜ. க பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு வந்திருந்தார் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு முன்னதாகவே நான், நீ முதலமைச்சர் என்று கூறுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. அது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று சக்தி உருவாக்கப்படும். பொதுத்தேர்தல் வரும்போது நல்ல கூட்டணி அமைந்து 2016-ல் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும். தற்போது தமிழகத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் விரும்பி சேர்ந்துள்ளனர். ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் இணைவது குறித்து அவர்தான் தெரிவிக்க வேண்டும்.

  • என்றார் அவர்.

Related articles

Recent articles

spot_img