1087011 tamilnadu assbly33 - 2026

மூன்றாவது நாளாக சட்ட சபை கூடியது..

சற்றுமுன்
1087011 tamilnadu assbly33 - 2026

பரபரப்பான சூழ்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் சட்டசபை கூடியது.

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான இரங்கல் குறிப்பை படித்தார். 3-வது நாளாக சட்டசபை காலை 10 மணிக்கு கூடியது.

இந்தநிலையில், சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதன்மூலம் பெருநகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும் – சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு தகவல் சட்டசபையில் இன்று 5 முக்கிய குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

பொதுக்கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, சட்டவிதிகள் ஆய்வுக் குழு, அரசு உறுதிமொழிக் குழு, மநுக்கள் குழு, என 5 குழுக்களின் அறிக்கைகளையும் அதன் தலைவர்கள் சட்டசபையில் தாக்கல் செய்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.