நேபாள் விமான விபத்து: 32 உடல்கள் மீட்பு-தொடரும் மீட்புப் பணிகள்..

Yeti Airlines1 - 2026

 பத்து வெளிநாட்டினர் உள்பட 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில், குறைந்தது 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்படி, எட்டி ஏர்லைன்ஸின் 9என்-ஏஎன்சி ஏடிஆர்-72 விமானம் 10 வெளிநாட்டினர் என 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10:33 மணிக்கு புறப்பட்டது.

இமயமலை தேசத்தின் முக்கிய சுற்றுலா தலமான பொக்ரா சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம், பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பழைய விமான நிலையத்துக்கும் புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 

விமானத்தில் இருந்த 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,  சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இயற்கை எழில் சூழ்ந்த பொக்ராவுக்கு பயணித்த பயணிகளில் இந்தியவர் யாராவது இருக்கிறார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.இடிபாடுகள் ஏற்பட்ட இடத்தில் இருந்து குறைந்தது 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காஸ்கி மாவட்டத்தின் முதன்மை மாவட்ட அதிகாரி டெக் பகதூர் கேசி கூறுகையில், விமானம் சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது.  தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். இந்த விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த அவர், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.நேபாளத்தின் மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் கடந்த மே 29 ஆம் தேதி தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டின் மிகப்பெரிய இந்த விமான விபத்தில் நேபாளத்தின் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 22 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories