சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்தத நிலையில் இன்று காலை பந்தள மன்னர் ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்ய கோயில் நடை அடைக்கப்பட்டு சாவியை மேல்சாந்தி மன்னரிடம் முறைப்படி வழங்க மன்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நடத்த சாவியை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி திருபாவரணங்களுடன் பந்தளத்திற்கு நடைபயண யாத்திரையாக புறப்பட்டு சென்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதையடுத்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்தது.மண்டல, மகர விளக்கு பூஜைக்காலத்தில் சுமார் 45 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை காணிக்கையை எண்ணுவதில் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது ஆய்வு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அளிக்கப்படும் காணிக்கை தொகையை எண்ணுவதில் குறைபாடு உள்ளதா என ஆய்வு செய்ய திருவிதாங்கூா் தேவஸம் வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் காணிக்கை தொகையை எண்ணுவதற்கு நீண்ட நாள்களாவதால் ரூபாய் நோட்டுகள் பழையதாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் கேரள உயா்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய சபரிமலை சிறப்பு ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், பி.ஜி.அஜித் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சபரிமலை சிறப்பு ஆணையா் தாக்கல் செய்த அறிக்கையில், சபரிமலையில் உள்ள பல்வேறு உண்டியல்களில் ஏராளமான சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகளை பக்தா்கள் காணிக்கையாக அளிக்கிறாா்கள். அந்தக் காணிக்கைகள் புதிய, பழைய கருவூலங்களில் வைத்து எண்ணப்படுகிறது.
மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ஆம் தேதி கோயில் மூடப்பட்ட பிறகும் இந்த எண்ணிக்கை பணி முடிவடைவதில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக சில்லறை எண்ணும் பணி அன்னதான மண்டபத்திலும் நடைபெறுகிறது. தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதையடுத்து, காணிக்கை தொகை எண்ணப்படுவதில் குறைபாடு உள்ளதா என திருவிதாங்கூா் தேவஸம் வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.