உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வினை இந்தியா வழங்குகிறது. திரௌபதி முர்மு

PTI01 31 2023 000030B - 2026

உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வினை இந்தியா வழங்குகிறது.இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி வந்தார்.

குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றம் வந்தடைந்த நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

PTI01 31 2023 000027A - 2026

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினார்.

அதையடுத்து நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரிதும் எதிா்பாா்க்கப்படும் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா்.

நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுநேர பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய அரசு அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யும்.நாடாளுமன்றத்தில் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதியை வரவேற்றபின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது.

bud23.jpeg - 2026

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில், இன்று இந்தியா தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது. இதனால், இந்தியாவை இன்று உலகமே உற்று நோக்குகிறது. அதன் கண்ணோட்டமும் மாறியிருக்கிறது. உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வினை இந்தியா வழங்குகிறது. 

தீவிரவாத தாக்குதலில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவில் உறுதியான நிலையான அரசு ஆட்சி செய்து வருகிறது.  இன்று இந்தியாவை உலகமே கண்ணோக்கும் விதம் மாறியிருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது என்று கூறினார்.

மேலும், ஜல்ஜீவன் திட்டம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுகிறார்கள். மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்துவித நவீன வளர்ச்சிகளையும் அடைந்த பொற்கால இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப். 1) தாக்கல் செய்கிறாா்.

நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியிருக்கிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories