“தீய சக்தி” திமுக : பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி சாடல்

ct ravi and annamalai - 2026

“திமுக ஒரு தீய சக்தி. இந்த இடை தேர்தலில், இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிமுகவும் உறுதியுடன் ஒன்றுபடுவது அவசியம்” என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.

இன்று (03.02.2023) கமலாலயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது : “1972-ல் அ.தி.மு.க உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள், தி.மு.க.வை ‘தீய சக்தி’ என்று அழைத்தார். அந்த நிலையிலிருந்து, தற்போது 2023-வரை திமுக இன்னும் மாறவில்லை.

செல்வி ஜெயலலிதா அம்மாவும், தான் உயிருடன் இருக்கும் வரை, திமுகவை ”தீய சக்தி” என்றுதான் அழைத்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்குப் பெறாத நிலையில், ஈரோடு கிழக்கில் இந்த இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும், திமுக என்ற கட்சி, ஒரு தனிப்பட்ட குடும்ப லாபத்திற்காகவும், அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும், தொடர்ந்து செயல்படுகிறது.

இதனால் மக்களிடையே தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு மனநிலை உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் என்ற மக்கள் விரோதப் போக்குகள் ஒருபுறம்…, அது மட்டுமின்றி, தமிழ்க் கலாச்சாரத்தின் மீது திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் வெறுப்புணர்வும், தாக்குதல்களும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

கடைமட்ட கட்ட பஞ்சாயத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பும், அதைக் கட்டுப்படுத்த வழியில்லாத திமுகவுக்கு எதிராக, தமிழ் மக்கள் இருப்பதை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. திமுக பணபலம் மற்றும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதால், இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இப்போதே ஈரோட்டில் நடப்பதையெல்லாம் பார்த்து வருகிறோம். அதனால்தான் இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அ.தி.மு.க.வும் உறுதியுடன் ஒன்றுபடுவது மிக அவசியம். இன்று காலை தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். இது ஒரு நல்ல முன்னேற்றம்,

நமது தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் சார்பாக சில விஷயங்களை தெரிவித்தேன். அதையெல்லாம் உங்களிடம் தனித்தனியாக, என்ன பேசினோம் என்பதை, இப்போது நான் வெளியிட இயலாது.

இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை இருவரிடமும் வலியுறுத்தியுள்ளோம்.” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories