December 6, 2025, 7:22 AM
23.8 C
Chennai

ஆன்லைன் வர்த்தகத்தில் 1.46கோடி பண மோசடி மூவர் கைது..

vikatan 2023 02 7ce18b54 f9e0 43fe b1ab 2df0685143fc Screenshot 182 1 - 2025

ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் வியாபாரம் முடித்துதருவதாகக் கூறி ரூ.1.46 கோடி மோசடி செய்த வேலூர் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகாந்த் லட்சுமணராவ் ஜராங். இவர் ‘Eco Global Private Limited’ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் செதுக்கரை கிராமத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவர், ‘வர்த்தக ஏஜெண்ட்’ எனக்கூறி அறிமுகமாகி யிருக்கிறார். இதையடுத்து, அந்த வர்த்தக நிறுவனத்தில் ரூ.70 லட்சத்துக்கு வியாபாரம் முடித்து, அதற்குரிய பணத்தையும் செலுத்தியிருக்கிறார் சீதாராம். நம்பிக்கை ஏற்பட்டதையடுத்து, அந்நிறுவனம் ரூ.1.80 கோடி வியாபாரத்தை சீதாராமிடம் கொடுத்தது.

ஆனால், வியாபாரம் முடிந்தப் பின்னரும் அந்தத் தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தியிருக்கிறார் சீதாராம். நிறுவனம் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படவே, சில லட்சங்களை மட்டும் செலுத்தியிருக்கிறார். சுமார் 1,46,08,000 ரூபாயை மோசடியாக கையாடல் செய்திருக்கிறார். கையாடல் செய்யப்பட்ட தொகையை செலுத்திவிட்டதாக வங்கி ரசீதுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை விபரங்களையும் போலியாக தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

தணிக்கையின்போது, இந்த மோசடியை கண்டறிந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், இதுபற்றி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தனர். எஸ்.பி ராஜேஸ்கண்ணன் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சீதாராமை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், கையாடல் செய்த ரூ.1.46 கோடி பணத்தை ஆடம்பரமாக செலவழித்தது தெரியவந்தது.

சொகுசு கார், வேன் வாங்கியதுடன், மனை வாங்கி புது வீட்டையும் கட்டி முடித்திருக்கிறார். அதோடு, பெங்களூருவில் இருந்து பெண்களை வரவழைத்து பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தை அள்ளி இரைத்திருப்பதாகவும் விவரிக்கிறார்கள் போலீஸார். இதையடுத்து, சீதாராமை கைது செய்த போலீஸார், அவரின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சதீஷ்குமார், சரவணன் ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், சீதாராமின் மனைவி விஜிதா மற்றும் வசந்த்குமார், எஸ்.ஆர்.டிரேடர்ஸ் உரிமையாளர் சரண்ராஜ் என மேலும் மூன்று பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories