
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தாயாரை இழந்து வாடும் பன்னீர்செல்வம் மற்றும் அவரின்குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில், ஓ.பன்னீர்செல்வம் தாயார்
உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தினார்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





