
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பான முறையில் நடந்து வருகிறது.. 7-வது சுற்று முடிவில் 35889 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளதால் அவர் வெற்றி உறுதி செய்துள்ளது.
முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 7-வது சுற்று முடிவில் 35889 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அவர் 57112 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 21223 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 4102 தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 502 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குள் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்றுவிட்டது என தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கூறியுள்ளார்.





