திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்பு..

Published:

images 23 - 2026

திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பாஜக கூட்டணி அபார வெற்றிபெற்றது. 32 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது.

இதனிடையே, கடந்த முறை திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா மீண்டும் 2வது முறையாக முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மற்றொரு பாஜக மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியுமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகின.

க்இதனால், தேர்தலில் வெற்றிபெற்றபோதும் முதல்-மந்திரி யார்? என்பதில் திரிபுரா பாஜகவில் குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து, பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர்.

இந்நிலையில், பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சை குழப்பம் முடிவுக்கு வந்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதன் மூலம் திரிபுராவின் முதல்-மந்திரியாக 2வது முறையாக மாணிக் சகா பதவியேற்றுக்கொண்டார். அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மாணிக் சகா திரிபுராவின் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பலரும் கலந்துகொண்டனர். ரத்தன் லால் நாத், பிரணாஜித் சிங்கா ராய், சந்தனா சக்மா மற்றும் சுஷந்தா சவுத்ரி ஆகியோர் திரிபுரா மாநிலத்தின் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img