Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த விவகாரத்தில் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு

குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த விவகாரத்தில் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு

கோவை, திருச்சி,  தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடியபோது அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த விவகாரத்தில் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர்  4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை  செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வரும் வழியில், கெளதம், ஜோஸ்வா ஆகியோர் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

காவல் துறையினரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருச்சி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நக