குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த விவகாரத்தில் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு

கோவை, திருச்சி,  தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடியபோது அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த விவகாரத்தில் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

images 24 - 2026

கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர்  4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை  செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வரும் வழியில், கெளதம், ஜோஸ்வா ஆகியோர் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

காவல் துறையினரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருச்சி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர் விசாரணியில், குழுமாயி அம்மன் கோயில் அருகே நகை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து நகை இருக்கும் இடத்தை கண்டறிய இருவரும் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, துரை, சோமசுந்தரம் ஆகியோர் காவல் ஆய்வாளர் மோகனை தள்ளிவிட்டு, முட்புதரில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை கொண்டு ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காவல்துறையினர் தங்களை தற்காத்து கொள்ள இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் மடக்கி பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் காவல்துறை கைது செய்ய முயலும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானதன் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories