விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை-இபிஎஸ்..

500x300 1853046 eps - 2026

சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க அ.தி.மு.க. கொணடு வந்த திட்டங்களை கைவிட்டு விட்டன. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை பற்றி பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. தமிழக அரசு தார்பாய்களை வழங்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.

வேளாண் மானியக்கோரிக்கையில் உள்ளன வற்றை பட்ஜெட்டாக வாசித்து உள்ளனர். விவசாயிகள் பயன் அடையும் வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு நன்மையும் இடம் பெறவில்லை. பெரிய திட்டங்கள் எதையும் விவசாயிகளுக்காக இந்த அரசு அறிவிக்கவில்லை.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கரும்பு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இன்று வேளாண் பட்ஜெட்டை 3-ம் முறையாக தாக்கல் செய்தும் அது தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. எனவே இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் வழங்கினோம். ஆனால் இந்த அரசு ரூ.13,500 மட்டுமே வழங்கி உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய்கள் வழங்கி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து கொண்டு இருக்கின்றன. காவிரி குண்டாறு திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது கண்ட னத்துக்குரியது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் நடக்க முடியாத சவலை குழந்தையாக உள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories