எம்.பிகளின் கடும் அமளி இரு அவைகளும் 7வது நாளாக முடக்கம்..

பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பிகளின் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஆனால், கடந்த வாரம் முழுவதும் தொடர் அமளி ஏற்பட்டதால் ஒரு மசோதாவை கூட விவாதம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

500x300 1852600 parli1 - 2026

அதேபோல இன்று காலை இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தில் ஈடுப்பட்டனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் 7வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. அவை தலைவரான குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் அவரது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவர்களுக்கும் தகவல் அனுப்பினார்.

ஆனால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என காங்கிரஸ் மற்றும் திமுக அவருக்கு தகவல் தெரிவித்தனர். பிற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை பாரதீய ஜனதா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் பேச்சுவார்த்தை, ஆலோசனை எதுவும் நடைபெறாமல் அந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து 2 மணிக்கு மாநிலங்களவை கூடிய போது சில உறுப்பினர்கள் நாளை உகாதி , நௌரோ உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் விடுமுறை தேவை எனவும் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்று கொண்ட அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் நாளை விடுமுறை என அறிவித்தார். இந்நிலையில் உகாதியையொட்டி நாளை விடுமுறை என்பதால் மாநிலங்களவை 23ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவை நடவடிக்கை தொடரலாம் என்று ஆரம்பிக்கும் போது மீண்டும் முழக்கங்கள் எதிர் முழக்கங்கள் என 7வது நாளாக அவை முடங்கின. மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரத்தை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இடைப்பட்ட நேரத்தில் இன்று எதிர்கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து போராட்டம் நடத்தினர்.

மிக பெரிய பேனர் ஒன்றை திறந்து வைத்து அதன் அருகே நின்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் இரு அவைகளுக்கு சென்றபோது மீண்டும் மோதல் வெடித்தது.

ஏற்கனவே கடந்த 6 நாட்களாக விவாதம் எதுவும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியிருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் 7வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories