December 6, 2025, 7:54 PM
26.8 C
Chennai

முதுகெலும்பு இல்லாமல்தான் காங்கிரஸில் இருக்க வேண்டும்- குலாம் நபி ஆசாத்..

images 2023 04 06T105825427 - 2025
#image_title

மூத்த அரசியல்வாதியான குலாம் நபி ஆசாத், தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கு ராகுல் காந்தியே காரணம் என்று கூறியதுடன் கட்சியின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதுமட்டுமல்லாமல், அரசியலில் யாருமே தீண்டத்தகாதவர் இல்லை என்று கூறியது அவர் பாஜக பக்கம் சாயலாம் என்ற சந்தேகங்களை வலுப்பெறச் செய்வதாக அமைந்துள்ளது.

‘ஆசாத்’ என்ற பெயரில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டுப் பேசிய குலாம் நபி ஆசாத், இனி ஒருபோதும் காங்கிரஸுக்கு திரும்பப்போவதில்லை என்று செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நீங்கள் காங்கிரஸிலிருந்தால் முதுகெலும்பு இல்லாமல்தான் இருக்க வேண்டும். அங்கே உங்களுக்கு அவ்வாறாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கு ராகுல் காந்தியே காரணம். நீங்கள் காங்கிரஸில் இருந்தால் முதுகெலும்பே இல்லாமல் இருக்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுக்கும் வகையில் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை ராகுல் தூக்கி எறிந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காத்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சி மவுனமாக இருந்தது. அந்தச் சட்டம் இருந்திருந்தால் இன்று ராகுலுக்கு இந்த நிலை வந்திருக்காது. அதைக் கிழ்த்தெறிந்தவருக்கு இன்று அது பயன்பட்டிருக்கும்.

உங்கள் வீட்டுச் சுவற்றில் நீங்களே ஓட்டை போட்டுவிட்டு அதன் வழியாக வெளியாட்கள் பார்க்கிறார்கள் என்று கூச்சல் போடுவது எந்த விதத்தில் நியாயமாகும். காங்கிரஸ் அதைத்தான் செய்கிறது.

ட்விட்டரில் அரசியல் செய்பவர்களைவிட நான் 2000 சதவீதம் காங்கிரஸ்காரனாகத்தான் இருக்கிறேன். என் கொள்கைகளின் அடிப்படையில் நான் 24 கேரட் காங்கிரஸ்காரன். அவர்கள் 18 கேரட் கூட தேறமாட்டார்கள். நான் கட்சியிலிருந்து வெளியே வந்த பின்னர் என்னை சோனியா காந்தி மீண்டும் அழைக்கவில்லை. சோனியா காந்தி வசம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருந்திருந்தால் நான் இன்று இங்கே இப்படி தனித்து நிற்க மாட்டேன்.

நான் மீண்டும் காங்கிரஸில் இணையமாட்டேன். அவர்களுக்கு என்னைப்போன்றோர் தேவையில்லை. அவர்களுக்கு ட்விட்டரில் வேகமாக இயங்குபவர்கள்தான் தேவை. இந்திய ஒற்றுமை யாத்திரையால் காங்கிரஸ் 500 சீட் வெல்லும் என்று ட்விட்டரில் பேசுவோர் தான் அவர்களுக்குத் தேவை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தலுக்காக நான் பாஜகவில் இணைவேனா என்ற கேள்விகள் எழுகின்றன. அரசியலில் யாருமே தீண்டத்தகாதவர் இல்லை. இவ்வாறு குலாம் நபி ஆசாத் பேசினார்.

குலாம் நபி ஆசாத்தின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா, 50 ஆண்டுகளாக தான் எந்தக் கொள்கையை எதிர்த்தாரோ அதைத்தான் இப்போது குலாம் நபி ஆசாத் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் தொண்டர்களால் கடவுளாகப் பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது அவர் ஒரு களிமண் பொம்மை என்று நிரூபித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவருக்கு அள்ளிக் கொடுத்தது. அவர் கட்சியை இன்று சபிக்கிறார். 50 ஆண்டுகளாக கட்சியில் இருந்துவிட்டு துரோகம் செய்துள்ளார்.

கட்சி இனி எப்படி தொண்டர்களை நம்பும். கடந்த இரண்டு நாட்களாக விடுதலை, விடுதலை என்று முழங்கிக் கொண்டே யாருக்கோ அடிமையாக இருந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories