பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி..

1862460 theni 1 - 2026
#image_title

பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் மகளிர் போலீஸ் க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திரளானவர்கள் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாரதி. இவருக்கும் அவருடைய உறவினரான அருண் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

தற்போது பாரதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னமயில், பெரியகுளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் பங்கேற்ற டி.எஸ்.பி. மற்றும் பெண் போலீசார் பாரதிக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, வளையல் அணிவித்து, மலர் தூவி குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர்.

மேலும் போலீஸ் நிலையத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு அனைத்து போலீசாரும் ஒன்று சேர்ந்து தாயுள்ளத்தோடும் சொந்த பந்தங்களாக கூடி நின்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories