தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

images 11 - 2026
#image_title

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.

சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட வெயிலின் உஷ்ணம் தாக்கி வருகிறது.

வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக வீசி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்தது.

15-ந்தேதிக்கு பிறகு சராசரி வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் நம்புவதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள். கிழக்குப்பகுதியில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் அதிகரித்து உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கீழ்த்திசை காற்று இல்லாததால் வருகிற நாட்கள் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். பருவத்திற்கு இயல்பான வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை திடீரென உயரலாம் என்று கூறியுள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், `அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும். 15-ந்தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும்.

இது பருவத்திற்கு இயல்பானது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருந்து இயல்பை விட குறைவாக இருக்கும். நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் இந்த மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.4 டிகிரி செல்சியஸ் ஆகும்’ என்றார்.

கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது. ராயலசீமா மற்றும் தெலுங்கானா வரை வறண்ட வானிலை நிலவுகிறது. வடகிழக்கு காற்று நுழைவதால் அடுத்த 4, 5 நாட்கள் வெப்ப நிலை படிப்படியாக உயரும் என்று தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories