
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா ஏப்ரல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது
தென்னிந்தியா முழுமைக்கும் ஆன்மிகத் தொண்டில் சிறந்து விளங்கியவர்கள் விஜயநகரப் பேரரச மன்னர்கள்.
அதிலும் அன்னியர் பிடியில் நாடு இருந்த அந்த சமயத்தில், இவர்களது பணி அளப்பற்கரியது. 13-ம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்புக்குப் பின்னர் சிதைவு பட்டிருந்த ஸ்ரீரங்கம் கோயில் முழுமையும் சீரமைத்தவர் விஜயநகர மன்னர் விருப்பன்ன உடையார்.
60 ஆண்டுகளாக நின்று போயிருந்த திருவிழாக்களை மீண்டும் நடத்தினார். இதற்காக 17,000 பொற்காசுகளையும், 53 கிராமங்களையும் தானமாகக் கொடுத்தார்.
பாமர கிராம மக்களிடமும் உதவிகள் கோரினார். தானியங்களையும், கால்நடைகளையும் மக்கள் கோயிலுக்கு வழங்கினர்.
ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . அப்போது சுவாமி நம்பெருமாள் நியமனப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விடுவதாக பட்டயம் எழுதும் நிகழ்ச்சி முக்கியமானது.
ஸ்ரீரங்கம் அருகில் உள்ளது இந்த கிராமம். 13-ம் நூற்றாண்டு சம்பவங்களை நினைவுபடுத்துவதாக இப்போதும் இந்நிகழ்ச்சி அரங்கேறுகிறது.
ஶ்ரீரங்கத்தில் ஏப்11ல் தொடங்கிய விருப்பன் திருநாள் 600 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சித்திரை உற்சவம். இது தொடங்கப்பட்டது 1383 ஆம் ஆண்டு. இந்த ஆண்டு 640-வது உற்சவம். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.
13-ம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்புக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் மதுரைக்கும், திருப்பதிக்கும் இடம்பெயர்ந்தார். 48 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்தார். விஜயநகரப் பேரரச மன்னர் விருப்பன்ன உடையார் 17,000 பொற்காசுகளும், 52 கிராமங்களும் தானமாக கொடுத்து இவ்விழாவைத் தொடங்கி வைத்தார். இதனால் விருப்பன் திருநாள் எனப்படுகிறது. இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது