பட்டியல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கூறு போடும் கட்சிகளைப் புறக்கணிப்போம்!

hindumunnani - 2026

இந்து தலித் மக்களின் இடஒதுக்கீட்டை முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு கூறு போட நினைக்கும் அரசியல் கட்சிகளை புறக்கணிப்போம் – இந்து தலித் மக்களின் குரலாய் இந்துமுன்னணி ஒலிக்கும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

மதம் மாறிய தலித் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கின்ற வழக்கு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் நேற்று விவாதம் எழுந்துள்ள நிலையில் இந்திய சமூகத்தில் அது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அடிப்படையில், கிறிஸ்தவ இஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அண்ணல் அம்பேத்கரின் சித்தாந்தத்தை சிதைக்கும் செயலாகும்.

ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் காண்பதற்காக அண்ணல் அம்பேத்காரால் உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீடு கொள்கை ஆகும். இந்து மதத்தில் மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என கூறிக் கொள்ளும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் தங்கள் மதத்தில் சம உரிமை உள்ளதாக கூறிவரும் நிலையில் மதம் மாறிய தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகை தங்களுக்கும் வேண்டுமென கேட்பது அடிப்படை வாதம் அற்றதாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து பட்டியலின மக்களின் சலுகைகளை முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பிரித்துக் கொடுக்க நினைப்பது இந்து தலித் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை ஏற்காத தற்போதைய மத்திய அரசு முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு கே ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு குழுவினை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த குழுவின் அறிக்கையும் வரும் வரை காத்திருந்து அதனையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அனைத்து இந்து தலித் மக்களின் குரலாய் இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது.

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை அளிப்பது மதமாற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் ஒரு காலகட்டத்தில் இது இந்திய இறையாண்மைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை வாக்கு வங்கி செய்யும் அரசியல் செய்யும் கட்சிகள் உணர வேண்டும். இந்து தலித் மக்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை இந்து பட்டியலை இன மக்கள் அடையாளம் கண்டு அரசியல் ரீதியாக புறக்கணித்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என இந்து மக்களை இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories