திருவள்ளூர் மப்பேடு அருகே கார் மீது வேன் மோதல் 3 வாலிபர்கள் பலி..

images 22 - 2026
#image_title

திருவள்ளூர் மப்பேடு அருகே கார் மீது வேன் மோதி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வேனில் பயணம் செய்த அரக்கோணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10 பெண்கள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரக்கோணம், கணேச நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அஸ்வின்(வயது25). இவர் நேற்று இரவு நண்பர்களான அதே பகுதி பாலசுந்தரம் தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் பாலாஜி(26), அசோக்நகரை சேர்ந்த செல்வம் மகன் மதன்(26) மற்றும் விஷ்ணு (28), ஹேம்நாத்(29) ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். இரவு 12.30 மணியளவில் கார் திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு அடுத்த இருளஞ்சேரியில் தண்டலம்-அரக்கோணம் சாலையில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணி முடிந்து தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டுவேன் ஒன்று அரக்கோணம் நோக்கி வந்தது. இருளஞ்சேரியில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது அதிவேகமாக வந்த காரும் வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

காரில் இருந்த அஸ்வின், பாலாஜி, மதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். விஷ்ணு, ஹேம் நாத் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதேபோல் வேனில் பயணம் செய்த அரக்கோணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10 பெண்கள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

வேனை ஓட்டிய அரக்கோணம் மேல்பாக்கத்தை சேர்ந்த செல்வகுமாரும் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான அஸ்வின், பாலாஜி, மதன் ஆகியோரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த விஷ்ணு,ஹேம்நாத் உள்பட 16 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விஷ்ணு,ஹேம்நாத் ஆகிய 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இரவில் வளைவில் திரும்பியபோது அதி வேகத்தில் கட்டுபாடு இல்லாமல் வந்ததால் வேனும், காரும் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலியான 3 பேரும் சென்னை புளியந்தோப்பில் பிரபலமான இரவு பிரியாணியை சாப்பிடுவதற்காக காரில் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி விட்டனர். பலியானவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories