ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றது . சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையில் பங்கேற்றனர்.ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியதை அடுத்து மாநிலம் முழுதும் சுமார் 45 இடங்களில் ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடை பெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து பணிமனை அருகே ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது. சுமார் 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனர். பேரணியை பேராசிரியர் சௌந்திரபாண்டியன் துவக்கி வைத்தார். காமராஜர் சிலை, சர்ச் ரோடு, கீழரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் பேரணி நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் பாரத் மாதா கீ ஜே உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சிவகாசி அருப்புக்கோட்டை விருதுநகர் என மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பாக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.