
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (ஏப்., 17) துவங்கியது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து அங்கு சென்ற மக்களுக்கு மேள, தாளம் முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. சவுராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழகம் மற்றும் குஜராத் இடையே வளமான கலாசார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் இன்று (ஏப்., 17) முதல் வரும் ஏப்., 30 வரை குஜராத்தின் பல இடங்களில் சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் நடந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மன்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சவுராஷ்டிராவுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு முறை மிகவும் பழமையானது. குஜராத் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.




