முல்லை பெரியாறு அணை பராமரிப்பு- உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

images 50 - 2026
#image_title

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை மாற்றி அமைத்தது.

மேலும், அணை பராமரிப்பு தொடர்பான விவகாரங்களை இனி அக்குழுவிடமே முறையிட வேண்டும் என்றும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இனி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் மனுக்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளில் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் கடந்த மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவரும் அணையை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள மனுதாரர் தரப்பில், அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் அணையின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

எனவே இந்த ஆய்வை மேற்கொள்ள அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக அணை பாதுகாப்பு குழு தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும் முல்லை பெரியாறு அணையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அதற்கு அனுமதிக்க வேண்டும்.

அதேப்போன்று வல்லக்கடவு – முல்லைப் பெரியாறு காட்டு வழிச்சாலையை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவும் கேரள அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “முல்லை பெரியாறு அணை விவகாரத்தை பொருத்தமட்டில் அதன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு, கேரள அரசு அனுமதியளிக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களுக்கும் மத்திய அரசு 2 வாரங்களில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories