திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு..

images 55 - 2026
#திருமலை

திருப்பதி திருமலை கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும்.

இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும். அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் நாளை மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.

மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பதியில் நேற்று 66, 476 பேர் தரிசனம் செய்தனர். 25,338 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories