
விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகளை போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இச்சமயத்தில் ஈடுபட்ட வர்களில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி ஞானநந்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (34) இவர் வெள்ளைப் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 02.03.2023ம் தேதி தனது வீட்டிற்கு அருகே உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்ற போது பட்டப்பகலில் வீடு புகுந்து சின்னத்தம்பியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில் லிடியா மேரி(25), மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆரோக்கிய ஜெயராம் என்ற சின்னவர்(29) மற்றும் மேட்டுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்ற பானை மகேந்திரன்(25) ஆகிய யுவராஜ் (29) மற்றும் விக்னேஷ் (29) ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்த நிலையில் கடந்த மார்ச் 16ம் தேதி சின்னதம்பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (29) மற்றும் விக்னேஷ் (29) ஆகிய இரண்டு பேரை பாதுகாப்பு காரணங்களுக்காக திண்டுக்கல் சிறையில் இருந்து விருதுநகர் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் யுவராஜ் மற்றும் விக்னேஷ் இருவருக்கும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் போலீசார் பாதுகாப்புடன் மார்ச் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் இரண்டு பேருக்கும் திண்டுக்கல் ஆயுத படை காவலர்களான சிலம்பரசன் மற்றும் அழகுராஜா ஆகிய இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காவலர்கள் சிலம்பரசன் மற்றும் அழகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் முகமுடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காவலர்கள் சிலம்பரசன் மற்றும் அழகுராஜா மீது மிளகாய் பொடி தூவி விட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யுவராஜ் மற்றும் விக்னேஷ் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கைதிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் காவலர் சிலம்பரசன் துப்பாக்கி சூடு நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்ததை எடுத்து மர்ம கும்பல் 5 பேரும் தப்பி ஓடி உள்ளனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ சம்பவம் நடைபெற்ற விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விருதுநகர் மாவட்ட எஸ்பி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார் மேலும் கைதிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காலு இடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்
மேலும் மர்ம கும்ப கும்பல் நடத்திய தாக்குதலில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கைதிகளான யுவராஜ் மற்றும் விக்னேஷ் பலத்த காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்
காவலர்கள் மீது மிளகாய் பொடி தூவி விட்டு பயங்கர ஆயுதங்களுடன் கைதிகளை தாக்கிய சம்பவம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது




