
2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வரும்போது கேரளாவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 24-ந்தேதி மாபெரும் பேரணியை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. எர்ணாகுளம் வேளாங்கண்ணி, குருவாயூர் மதுரை இந்த இரு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ஆம் தேதி துவக்கி வைப்பாரா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 25-ந்தேதி கேரளாவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 24-ந்தேதி மாபெரும் பேரணியை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. ஆனால் இதில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் பேரணியில் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.நீண்ட நாட்களாக எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு ரயிலாக இயங்குகிறது வாரம் இருமுறை இயங்கும் என அறிவிக்கப்பட்டும் இதுவரை சிறப்பு கட்டண சிறப்பு ரயிலாகவே இயங்குகிறது.தமிழக கேரள மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ரயிலை ரெகுலர் விரைவுரயிலாக புதிய எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயங்கவேண்டும்.
வேலும் குருவாயூர் புனலூர் ரயிலை மதுரைவரை நீடித்தது இயக்க கேரளா மக்களவை உறுப்பினர்கள் பிரேமச்சந்திரன் கொடிக்குன்னில் சுரேஷ் ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இந்த இரு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ஆம் தேதி துவக்கி வைப்பாரா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்




