December 8, 2025, 3:51 AM
22.9 C
Chennai

பிடிஆர் லீக்ஸ்-2: அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘வாய்ஸ்’ #PTRLeaks

ptr leque2 - 2025
#image_title

பிடிஆர் லீக்ஸ்-2: #PTRLeaks -இரண்டாவது ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான அந்த இரண்டாவது ஆடியோவில் உள்ள விஷயங்கள் இப்போது சமூக தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை இந்த இரண்டாவது ஒலிப்பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளதாக வெளியான விஷயங்கள்…

ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலில் நுழைந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன்… கட்சிப்பொறுப்பும் ஆட்சிப்பொறுப்பும் தனித்தனி நபரிடம் இருப்பதே சிறந்தது பாஜக.,வை எனக்கு இதனால் தான் பிடித்திருக்கிறது. கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா?

இங்கு ஒவ்வொரு (பீப் ஒலி) முடிவும் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களால்தான் எடுக்கப் படுகிறது.

நிதி மேலாண்மை செய்வது எளிது. இது ஒரு
அமைப்பு இல்லை. அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் ஒட்டுமொத்தமாக அவர்களே எடுத்துக் கொள்கின்றனர்.
முதல்வரின் மகனும் மருமகனும் தான் இங்கே கட்சியே. அவர்களை நிதிமேலாண்மை செய்யச் சொல்லுங்கள்… அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகுதான் நான் இப்படி முடிவு செய்தேன். இது ஒரு நீடித்த முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரும் வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால்… இந்தக் குறுகிய காலத்தில் நான் வெளியேறிச் சென்றால், அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கே திரும்பி அடிக்கும். இதை விரும்பி… இதை எப்படிச் சொல்வது… நான் இந்த யுத்தத்தை மிக விரைவிலேயே கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என்றே நான் கருதுகிறேன். நான் இந்தப் பதவியில் இல்லாத போது… அதைப் பற்றிக் கவலைப்பட எனக்கு ஏதுமில்லை. யாரேனும் ஒருவர் செய்யலாம். … -என்ற ரீதியில் அவரது பேச்சு அமைந்திருக்கிறது.

ஏற்கெனவே முதல் பிடிஆர்_லீக்ஸ் ஆடியோவுக்கு அவர் இது செயற்கையாக உருவாக்கப்பட்டது என ஒரு நிறுவனத்தின் பெயரில் சரிபார்க்கப்பட்டதாக தகவலை வெளியிட்டிருந்தார். அவரிடம் இருந்து சரியான விளக்கங்கள் வருவதற்குள் இப்போது இரண்டாவது ஆடியோ கோப்பு வெளியாகியிருக்கிறது. இதனை வெளியிட்டு பாஜக., மாநிலத் தலைவர் கே அண்ணாமலை, அவரது டிவிட்டர் பதிவில் நிதியமைச்சர் தியாகராஜனுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். திமுக., பாஜக., இரண்டுக்கும் உள்ள அடிப்படைப் பொதுவேறுபாட்டை சிறப்பாக விளக்கியிருக்கிறார் என்று அவருக்கு பாராட்டையும் தெரிவித்திருக்கிறார்.

” எனக்கு இருக்கும் மிகப் பெரிய வசதி என்னவென்றால்.. இப்போது நான் விலகினால்.. இந்தக் குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும் ” – என்று பிடிஆர் பேசுவதன் மூலம், அவர் எற்கெனவே திட்டமிட்டு சில விஷயங்களைக் காய் நகர்த்துவதாக டிவிட்டர் பதிவுகளில் சிலர் கருத்துப் பதிவிட்டிருக்கின்றனர்.

PTR-2 ஆடியோ ல பீப் சவுண்டு வருகிறதே என்ன சொல்லி இருப்பார் ? என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.

எப்படி இருந்தாலும் பிடிஆர்_லீக்ஸ்-2 இப்போது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Listen to the DMK ecosystem crumbling from within. The 2nd tape of TN State FM Thiru @ptrmadurai
Special Thanks to TN FM for drawing a proper distinction between DMK & BJP! #DMKFiles

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories