விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 142 மது பாட்டில்கள் இரு டூவீலர்கள் பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் கேகே நகர் சத்யா நகர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக தனஞ்செயன் டி.எஸ்.பி., தலைமையிலான தகவல் கிடைத்தது. அதன்படி திருத்தங்கள் போலீசார், தனிப்படையினர் சோதனையிட்டனர்.
பனையடிப்பட்டி தெருவை சேர்ந்த முனியம்மாள் 42, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 95 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சத்யா நகர் மணி 61, கே.கே., நகர் ராஜேந்திரன் 60, ராஜூ 66, ஆகியோரிடம் இருந்து 47 மதிப்பாட்டில்கள், இரு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.