கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு..

images 2 1 - 2026
#image_title

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் கொடநாடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடம், அங்கு பணிபுரிபவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் இறப்பதற்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனது ஆஸ்தான ஜோதிடரை சந்தித்தாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சம்மன் அனுப்பவும் திட்டமிடுள்ளனர்.

மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று நீதிபதி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணன், வழக்கினை ஜூன் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories