Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலம்..

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலம்..

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா்‌ திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்துக்கு, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.  சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, சுவாமியின் பிரதிநிதியாக பட்டர்கள், காலை  8.38 மணிக்கு, மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். தொடர்ந்து, மணக்கோலத்தில் தனி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, மங்கள அரசியான மீனாட்சிக்கும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கும் மகா தீபாராதனை, பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் கண்டு தரிசித்தனர். மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கோயிலில் கூடியிருந்த பெண்களும் தங்களது மங்கள நானை மாற்றிக்கொண்டனர்.

சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், திங்கள்கிழமை திக்கு விஜயமும் நடைபெற்றன.

இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் காலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

அதன் பின்னா், சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனி வாகனத்திலும் நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து, முத்துராமய்யா் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

இதைத் தொடா்ந்து, வேத, மந்திரங்கள் முழங்க காலை 8.35 மணிக்கு மேல் காலை 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.  

தொடா்ந்து, இரவு ஆனந்தராயா் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமியும் எழுந்தரு