வனத்தில் போட்டோ ஷூட்‌ நடத்திய வனத்துறை அமைச்சர்

IMG 20230505 WA0063 - 2026
#வனத்தில் போட்டோ ஷூட்‌ நடத்திய வனத்துறை அமைச்சர்

பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகள் படை சூழ வனத்துறை அமைச்சர், ‘போட்டோ ஷூட்’ நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்துள்ளார்.

காலை, 11:00 மணிக்கு கிளம்பி, வனத்துறை வாகனத்தில் வலம் வந்தார். வரும் வழியிலும், ஒவ்வொரு இடத்தில் நின்று, ‘போட்டோ ஷூட்’ நடத்தினார்.
முகாமிற்கு வந்து, சில நிமிடங்களில் ஆய்வை முடித்து கிளம்பினார். அவருடன் வந்த குழுவினர், முகாமில் இருந்து சிறிது துாரத்தில் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது, ‘ட்ரோன்’ பறக்க விட்டு, ‘ஸ்டைலாக போஸ்’ கொடுத்த அமைச்சர், அங்கு இருந்த அதிகாரிகளை கேமரா பார்க்க வேண்டாம்; பேசிக்கொண்டு இருப்பதை போல நில்லுங்கள்’ எனக்கூறினார். அதன்படி, அதிகாரிகளும் போஸ் கொடுத்தனர்.

ஒவ்வொரு இடமாக வாகனத்தை நிறுத்தி, போட்டோ எடுத்தனர். அதிகாரிகளும் எதையும் சொல்ல முடியாமல் கையை பிசைந்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்; இன்னும் பல கிராமங்களில் மின் வசதி, குடிநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல் அமைச்சர், வனத்தில், போட்டோ ஷூட்‌நடத்தியது வேதனை அளிக்கிறது. ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு ‘போட்டோ ஷூட்’ நடத்தியது, கேளிக்கையாக உள்ளது. இதெல்லாம், விதிமீறல் இல்லையா, வனக்குற்றத்தில் பதிவு செய்ய மாட்டார்களா, இதுதான், திராவிட மாடல் ஆட்சியா?’ என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories