ராஜபாளையம் அருகே ஓடையில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்..

988168 1 - 2026
#image_title

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரத்தில் ஓடையில் குளித்த போது இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பால்வண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் சரண்(13), 5-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் சரண், ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார்.

அங்கு அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சிங்கராஜ் என்பவரது மகன் 4-ம் வகுப்பு படிக்கும் சிவபிரசாத் (10) மற்றும் மேலும் சில சிறுவர்களுடன் சேர்ந்து சரண் விளையாடி வந்துள்ளார்.

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக எஸ்.ராமலிங்காபுரம் அருகே சிவகாமியாபுரம் அரசு பள்ளி பின்புறம் உள்ள ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஓடை நீர் கருங்குளம் கண்மாயில் இருந்து கீழராஜகுலராமன் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு செல்கிறது.

இந்நிலையில் ஓடையில் குளிப்பதற்காக சரண், சிவபிரசாத் உள்ளிட்ட 5 சிறுவர்கள் சேர்ந்து சிவகாமியாபுரம் பள்ளி பின்புறம் உள்ள ஓடைக்கு சென்றனர். ஓடையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்ட சரண், சிவபிரசாத் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பகுதி மக்கள் ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்டனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories