பொற்கோவில் அருகே இன்றும் குண்டுவெடிப்பு – 5 பேர் கைது..

images 77 - 2026
#image_title

பஞ்சாபில் உள்ள பொற்கோயில் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறைந்த தீவிரம் கொண்ட குண்டு ஒன்று வெடித்தது. கடந்த 5 நாட்களில் அந்த பகுதியில் நடந்த 3வது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமிர்தசரஸில் நடந்த குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் அமைதியை போலீசார் ஏற்படுத்துவர்” என்று தெரிவித்துள்ளார்.

முதல் குண்டுவெடிப்பு மே 6ம் தேதி நிகழ்ந்தது. இரண்டாவது குண்டு வெடிப்பு கடந்த திங்கள் கிழமை நிகழ்ந்தது. இவை அனைத்தும் பொற்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையும், பஞ்சாப் போலீஸாரும் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வெளியான முதல் தகவல்களின் படி, இந்த குண்டு வெடிப்புகளுக்கு தொலைவில் இருந்து தூண்டும் விசைப்பொறிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அமிர்தசரஸ் ஹெரிட்டேஜ் வீதியில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் வெடிபொருள்கள் குளிர்பான கேனில் வைத்து வீசப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். இந்த குண்டுவெடிப்புகளில் டெட்டனேட்டர் ஏதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குழப்பத்தை விளைவிக்கும் வகையிலேயே இந்த குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories