பழனி கோவிலில் பணி நியமனம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு..

images 79 - 2026
#image_title

பழனி முருகன் கோவிலில் ஊழியர்கள் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள், நூலகர் அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்துவான், தவில் வித்வான், தாள கருவி இசைப்பவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 281 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து பொது அறிவிப்பாணையை உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை.

இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படவும் இல்லை. ஆகையால் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனை என்பது அடிப்படை உரிமை மீறலாகும். இந்த நிபந்தனையை அறநிலையத்துறை கமிஷனர் நீக்கி உத்தரவிட வேண்டும்.

மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories