
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி சவரன் தங்கம் ரூ.44,920க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக ஒரு சவரன் ரூ.45,648க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நகை விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் ஏற்றமும், இறக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,705க்கும், சவரன் ரூ.45,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து 4,673 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ. 37,384ஆக விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 4.30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700 எனவும் விற்பனையாகிறது.




