
அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
2023-204-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, ஒரு லட்சத்து 66 மாணவ, மாணவிகள் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 53,563 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
21,828 பேர் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜுன் 4-ம் தேதி கடைசி நாளாகும்.