தமிழ்நாடு முழுவதும் அக்னிநட்சத்திர கத்தரி டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு 16 மே 2023 12:04 PM கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். மேலும் படிக்க சென்னை: தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின், வோட்கா என பலவகை மதுபாட்டில்கள் விற்பனை யாகி வருகிறது. பீர் வகைகளில் 5000, 2000, கிங்பிஷர் உள்ளிட்ட 46 வகை பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் என்று பட்டியலில் உள்ளது. ஆனால் இப்போது பீர் பாட்டில் ரகங்களில் 4 அல்லது 5 வகை ரகங்கள் தான் உள்ளது. எந்த பீர் வகையை கேட்டாலும் இல்லை என்றுதான் கடைக்காரர் கூறுகிறார். டாஸ்மாக் கடைகளில் மக்கள் விரும்பும் பெரும்பாலான மது வகைகள் இருப்பு இல்லாததால் அறிமுகம் இல்லாத, பெயர் தெரியாத சரக்குகள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இது மது குடிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘அதிகம் விற்பனையாகும் பிராண்டுகளை கேட்டு டெப்போவுக்கு தினமும் தகவல் அளிக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட சில பிராண்டுகள் மட்டுமே அனுப்புகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிராண்டுகளை வழங்க இயலவில்லை’ என்றனர். இப்போது கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கடைகளுக்கு பீர் பெட்டிகள் வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அனைத்தும் விற்பனையாகி வருவதால் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காலதாமதமாக கடைகளுக்கு சென்றால் ‘பீர்’ காலியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, ‘கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். விற்பனை குறைவாக நடக்கும் மற்ற கடைகளுக்கு பிரீமியம் சரக்குகள் தான் அனுப்பப்படுகிறது’ என்றனர். கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் கிடைத்தது. இப்போது சில நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை. பீர் குடிப்பவர்கள் பல கடைகளுக்கு சென்றாலும் பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கிறார்கள். பீர் குடிப்பவர்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகளில் 46 வகை பீர் இருப்பதாக டாஸ்மாக் கூறினாலும் கிடைப்பதோ 4 அல்லது 5 வகையான பீர் ரகங்கள் தான். இதனால் பீர் பிரியர்கள் கடை கடையாக சென்று விசாரித்து கடைசியில் கிடைக்கும் பீர் பாட்டிலை வாங்கிச்செல்கின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari