வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல்லைச் சேர்ந்த விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார்,
மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 2017ம் ஆண்டு
சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம், அவரது மகன்களான கார்த்திக் என்பவருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், முருகதாஸ் என்பவருக்கு தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாக 11 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தரமலும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 லட்சத்தை திருப்பி கொடுத்த நிலையில் மீதி 9 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்காமல் வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட செயலாளர் கலையரசனை கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமறைவாக இருந்து பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார்.
ஜாமீன் கோரிய மனுவில் மே 12ம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் 5 லட்சம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி பணத்தை ஒப்படைக்காததால் ஜாமீன் ரத்தான நிலையில் திருத்தங்கல் பாண்டியன் நகரில் இருந்த பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.