December 6, 2025, 4:12 AM
24.9 C
Chennai

சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி தொடக்கம்..

images 2023 05 17T152927726 - 2025
#image_title

சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்களில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரெயில் பயணத்துக்கு கவுண்டர்களில் டிக்கெட் வாங்கலாம். மேலும் பயணிகளுக்கு அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2,500-ல் மாத பயணம் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலி மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி இன்று தொடங்கப்பட்டது. இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார். 83000 86000 என்ற எண்ணில் CMRL Live எனும் சாட் வழியே டிக்கெட்டை பதிவு செய்யலாம்.

செல்ல வேண்டிய இடத்திற்கான கட்டணத்தையும் வாட்ஸ்அப் மூலம் செலுத்தி உடனே டிக்கெட்டை பெறலாம். இந்த புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணர்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ புறப்படும் போது, மெட்ரோ நிர்வாகம் கொடுத்த எண்ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேறும் இடத்தை அனுப்பி கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம். பயணரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் ‘கியூஆர்’ கோடை பயணத்தின் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் கூறும்போது, “மெட்ரோ ரெயிலில் 2-ம் கட்ட திட்ட பணியில் சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இப்பணி 2026-ம் ஆண்டு முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரெயிலில் தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். உலகிலேயே அதிக பயணிகள் பயணம் செய்யும் மெட்ரோவாக சென்னை உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே மெட்ரோ ரெயில் அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.யில் பயணம் செய்ய பலர் ஆர்வத்துடன் உள்ளனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories