கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற முடிவு எட்டப்படாத நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவருக்கும் இரண்டரை ஆண்டுகள் பங்குபோட்டு வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவி வழங்குவது தொடர்பான இழுபறியானது நிலவி வரும் நிலையில் டெல்லி ஜந்தர் சாலையில் உள்ள சோனியாகாந்தி இல்லத்தில் ராகுல் காந்தி, சித்தராமையா சந்திப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, முதல்வர் பதவியை இருவருக்கும் பிரித்து வழங்க காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளாக பிரித்து, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி வகிப்பார் எனவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்வராக பதவிவகிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. .