மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

GK_Vasanமீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடி நடவடிக்கை தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் – பிரச்சனைகளுக்கு – முற்றுப்புள்ளி வைக்க – மாநில அரசும், மத்திய அரசும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கையில் ராஜபக்ஷே வின் ஆட்சியில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஆதரவினால் புதிய கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றது. ஆட்சியில் பொறுப்பேற்ற பின்பு இலங்கை பிரதமர் தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார். மேலும் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோது மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்றார். அந்த பேச்சு வார்த்தையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது இலங்கையின் புதிய ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் தொடர ஆரம்பித்திருகிறது. நேற்றைய முன்தினம் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து, 86 மீனவர்களைச் கைது செய்திருக்கிறார்கள். மேலும் 11 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும், 3 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் ராஜபக்ஷே வின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இலங்கையின் புதிய ஆட்சியில் மிகப் பெரிய அளவில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்ட 81 படகுகளை தமிழக மீனவர்களிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட 81 படகுகளை சரி செய்தும், சேதப்படுத்திய வலைகளுக்கும், படகுகளுக்கும் உரிய நிவாரணமும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இலங்கை அரசிடம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை கால தாமதமின்றி உடனடியாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்வதற்கும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர, சுமூக தீர்வு ஏற்படவும், இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories