IMG 20230518 WA0077 - 2026

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 3ஆனது..

சற்றுமுன்
IMG 20230518 WA0077 - 2026
#image_title

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 3 ஆனது.

சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமை பெற்ற இந்த பட்டாசு ஆலையில் புஷ்வானம் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

IMG 20230518 WA0078 1 - 2026
#image_title

வெடி விபத்தில் இருளாயி, ஐய்யம்மாள், சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சுந்தரரேசன், குமரேசன், மற்றும்
ஐயம்மாள் ஆகிய மூன்று பேரும் பலி

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாரனேரி காவல் நிலைய போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆலை உரிமையாளர் கடற்கரை மற்றும் போர் மேன் காளியப்பன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து காளியப்பன் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.