விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்க்க சென்ற இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பரளச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை தாலுகா பரளச்சி அருகே புல்வாய்நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(28) ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் விஜயன்(27)
என்பவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் .
இந்நிலையில் நேற்று இருவரும் இராணிசேதுபுரம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர் அப்போது காட்டுப் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை வேளையில் ஆடுகள் மட்டும் வீடு திரும்பி உள்ளது ஆடு மேய்க்கச் சென்ற பெருமாள் மற்றும் விஜய் இருவரும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் இரவு முழுதும் தேடி உள்ளனர் .
இந்நிலையில் இன்று காலை அந்த காட்டுப் பகுதியில் பெருமாள் மற்றும் விஜயன் இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பரளச்சி காவல் நிலைய போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்