Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்நான் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே நீண்டகாலம் ஆகிறது-அண்ணாமலை..

நான் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே நீண்டகாலம் ஆகிறது-அண்ணாமலை..

images 1 1

செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்பும் 2000 ரூபாய் நோட்டு செல்லும். வங்கிகளில் மட்டும் வாங்க மாட்டார்கள். கடைகளில், தனிநபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, கோவையில் இருந்து சென்னை வந்த நிலையில் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக நான்கு 500 ரூபாய் நோட்டுகள், அல்லது 20 நூறு ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், ₹20, ₹50, ₹ 10 போன்ற சிறிய நோட்டுகள் தான் சில்லரை பரிமாற்றத்துக்காக உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அதைப்போன்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். நமது நாட்டிலும் அதேபோன்ற நிலைக்காக தான் ரிசர்வ் வங்கி இந்த நிலையை எடுத்துள்ளது.

அதே நேரத்தில் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குப் பின்பும் ₹2000 நோட்டுகள் பயன்படுத்தலாம். வங்கிகளில் மட்டும் வாங்கமாட்டார்கள். கடைகளில் மற்றபடி நாம் ஒருவருக்கொருவர் கொடுத்து, வாங்கிக்கொள்ளலாம். ஆனால் என்னிடம் 2000 ரூபாய் நோட்டே இல்லை. நான் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே நீண்டகாலம் ஆகிறது. எனவே நான் பயப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் 68 இடங்களை பெற்றுள்ளோம்.

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அடுத்த ஓர் ஆண்டு வரை, அவர்களுக்குள் சண்டை போடாமல் இருந்தால், அது மிகப்பெரிய சாதனை. அந்த சாதனையை சித்தராமையாவும் சிவகுமாரும் செய்வார்களேயானால், அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்க சிபாரிசு செய்யப்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.