கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை இருவரும் மரணம்..

IMG 20230524 WA0032 - 2026
# கணேசன் மேகலா

ஆத்தூர் அருகே கிணற்றில் குதித்த மகளும், காப்பாற்ற குதித்த தந்தையும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கணேசன்(45). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு பிரவீணா, மேகலா என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மனைவி சத்யா கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார்.இந்நிலையில்  கணேசன்  வெள்ளையம்மாள் என்பவரை  கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார்.மூத்த மகள் பிரவீனாவுக்கு திருமணம் நடைபெற்று தன் கணவர் வீட்டில் உள்ள நிலையில், இரண்டாவது மகளான மேகலா சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்‌.தற்போது விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த நிலையில் தம்பிக்கும், அக்கா மேகலாக்கும் தொலைக்காட்சி பார்ப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த மேகலா, வீட்டின் அருகே உள்ள தங்களது விவசாயி கிணற்றில் குதித்துள்ளார். இதை அறிந்த தந்தை கணேசன் மகளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த நிலையில், இருவருக்கும்  நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனை கண்ட கணேசனின் மனைவி வெள்ளையம்மாள் கூச்சலிட, அப்பகுதி மக்கள் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மேகலாவின் உடலை மீட்ட நிலையில், கணேசனின் உடலை பல மணி நேரமாக தேடியும் கிடைக்காததால் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories