ஸ்ரீவில்லிபுத்தூரில் 13லட்சம் நகை பணம் கொள்ளை..

Published:

images 24 1 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 13 லட்சம் இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தன்யா நகர் மற்றும் மல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தன்யா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தன்யா நகர் உள்பகுதியான பாரதி நகர் மற்றும் VRN காலனி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தங்களின் கை வரிசையை காட்டியுள்ளனர்.

பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இன்று காலை ஊர் திரும்பிய நிலையில் அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 4 1/2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனியா நகர் பகுதி முழுவதும் பூட்டி இருக்கும் வீடுகளை சோதனை செய்ததில் தன்யா நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயற்சித்திருப்பது தெரிய வந்தது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

மேலும் வி ஆர் என் காலனி பகுதியில் வெளியூர் சென்று இருந்த வங்கி காசாளர் ஒருவரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரை தொடர்பு கொண்ட காவல் துறையினர் அவர்கள் உறவினர்கள் மூலமாக வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த நெக்லஸ்,கம்மல் உட்பட 15 சவரன் தங்க நகைகள் களவு போயிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட காவல்துறையினர் மேலும் சில வீடுகளின் பூட்டு உடைக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த வீடுகளில் பொருட்கள் ஏதும் களவு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மோப்பநாய் வழைக்கப்பட்டு தடயவியல் நிபுணர்களின் உதவியோடு சிசிடிவி காட்சிகளை வைத்து இரவு நேரத்தில் முகமூடி அணிந்து வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையை நிகழ்த்தியுள்ள நபரை பற்றி காவல்துறையினர் தங்களின் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img